17476 ஜீவநதி: பங்குனி 2023: மு.சிவலிங்கம் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 195ஆவது இதழாக 10.03.2023இல் வெளிவந்த மு.சிவலிங்கம் சிறப்பிதழில், மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளில் தொழிற்சங்க அரசியல் (எம்.எம்.ஜெயசீலன்), மலையக நாவல் வரலாற்றில் மு.சிவலிங்கத்தின் நாவல்கள் (செ.யோகராசா), சமூக நீதியைக் கோரி நிற்கும் கதைகள்: மு.சிவலிங்கத்தின் ‘ஒரு விதை நெல்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து (மு.அநாதரட்சகன்), கேட்டிருப்பாயோ காற்றே-சிறுகதை (மு.சிவலிங்கம்), வியர்வையும் கண்ணீரும் செந்நீரும் கலந்த தேநீர்: ‘ஒப்பாரிக் கோச்சி’ (இ.சு.முரளிதரன்), மலையக மூத்த படைப்பாளி மு.சிவலிங்கத்தின் ‘வெந்து தணிந்தது‘ சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு பார்வை (புலோலியூர் வேல் நந்தகுமார்), நேர்காணல்- மு.சிவலிங்கம் (க.பரணீதரன்), தோட்டத்து உழைப்பாளிகளின் துன்பியல் வாழ்வின் வெளிப்பாடாய் ‘சி.வி.யின் தேயிலை தேசம்” (ஜெயப்பிரசாந்தி ஜெயபாலன்), மு.சிவலிங்கத்தின் படைப்புகள் (சு.தவச்செல்வன்), ஒப்பாரி கோச்சி –சிறுகதை (மு.சிவலிங்கம்), தமிழகத்தில் வாழும் மலையக அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்குதல் பற்றி பாராளுமன்ற அங்கத்தினருக்கு எழுதப்பட்ட மு.சிவலிங்கத்தின் பகிரங்கக் கடிதம் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11412 புதிய விஞ்ஞானம்: ஆண்டு 11.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1987. (அம்பலங்கொடை: மஹிந்த அச்சகம்). xvii, 206 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ. 1986ஆம்

17581 யாரும் பாடலாம் என்னை.

இயல்வாணன் (இயற்பெயர்: சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன்). சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (சென்னை 600093: வேரல் புக்ஸ்). 78 பக்கம்,

Spelautomater Utpröva Online

Content Vilket Onlinecasino Erbjuder Flest Spelautomater? Casinostugan Förvärv Din Extra Secret Of The Stones I närheten av ni letar postumt någon eminent casino med slots,