க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
36 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29.5×20 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 198ஆவது இதழாக 10.04.2023இல் வெளிவந்த இவ்வாளுமைச் சிறப்பிதழில் நா.யோகேந்திரநாதன் ஒரு பல்துறை ஆளுமை (கை.சரவணன்), நெருப்பாற்றில் நீந்தலெனும் நெடிய அனுபவம் (தாட்சாயணி), ஈழத்துச் சாதிய நாவல் வரலாற்றில் ‘இடிபடும் கோட்டைகள்’ (செ.யோகராசா), கலைஞர் நா.யோகேந்திரநாதனின் கலை ஆளுமை (கலாநிதி ரதிதரன்), நா.யோகேந்திரநாதனின் வானொலி நாடகத்துறையில் ஒரு உச்சம்பெற்ற கலைஞராகவே எனக்குத் தோன்றினார் (பி.எச்.அப்துல் ஹமீத்), நீந்திக் கடந்த நெருப்பாறு (எம்.சந்திரகாந்தா), நா.யோகேந்திரநாதனின் அரசியல் பார்வை (கே.ரி.கணேசலிங்கம்), நா.யோகேந்திரநாதன் படைப்புலகில் ஓர் ‘ஓயாத அலை’ (விவேக்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன.