க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மே 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
44 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29.5×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 202ஆவது இதழாக 20.05.2023இல் வெளிவந்த இவ்வாளுமைச் சிறப்பிதழில் ஒரு தனி அநுபவ முத்திரை பெற்றிருக்கும் அல் அஸூமத் சிறுகதைகள் (ஈழக்கவி), அல் அஸூமத் எழுதிய இஸ்லாமிய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும்-எனது பார்வை (அஷ்ரஃப் சிஹாப்தீன்), அல் அஸூமத் கவிதைகளில் சமூகம் (சி.ரமேஷ்), புதுமைப்பித்தனின் அந்தராத்மா-சிறுகதை (அல் அஸூமத்), அல் அஸூமத்தின் ‘வெள்ளைமரம்’ சிறுகதைத் தொகுப்பு (அ.யேசுராசா), யாப்புக் குறித்த அறிவை நல்கும் அற்புதமான நூல் ‘யாப்பியலுரை ஆய்வுடனான ஒரு விளக்கம்’ (இ.சு.முரளிதரன்), கல்லறை நிலவு (கவிதை-அல் அஸூமத்), அல் அஸூமத்தின் வெளியீட்டு முயற்சிகள் (ஜவாத் மரைக்கார்), அல் அஸூமத் உடனான நேர்காணல் (பரணீதரன்), ‘ஆயன்னையம்மாதாய்’ கசப்பான பல உண்மைகளின் கூட்டு விம்பம் (கந்தர்மடம் அ.அஜந்தன்), அல் அஸூமத்தின் இரு நெடுஞ்சிறுகதைகள் (ஜெயபிரசாந்தி ஜெயபாலசேகரம்), தம்பீ, மலையாண்டி (கவிதை-அல் அஸூமத்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மாத்தளை நகருக்கு அருகிலுள்ள ‘திக்கிரியா’ என்ற ரப்பர் தோட்டத்தில் 22.11.1942இல் பிறந்த பொன்னையா வேலாயுதம் என்ற இயற்பெயர் கொண்ட இவரது புனைபெயரே ‘அல் அஸூமத்’ என்பதாகும். பின்னாளில் அதனையே தனது இயற்பெயராகப் பதிவுசெய்துகொண்டுள்ளார்.