17480 ஜீவநதி: வைகாசி 2023: சாதியச் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

240 பக்கம், சித்திரங்கள், ஒளிப்படங்கள், விலை: ரூபா 800., அளவு: 29.5×21.5 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 200ஆவது இதழாக 01.05.2023இல் வெளியிடப்பட்டுள்ள இச்சாதியச் சிறப்பிதழில், சாதியம் நேற்று இன்று நாளை (ந.இரவீந்திரன்), அவையள் வேற ஆக்கள் (சிறுகதை-இதயராசன்), சாதிய சமூக அசைவியக்கம் பற்றிய ஆய்வுகளில் கோட்பாட்டுப் பிரயோகங்களும் சிக்கல்களும் (இ.இராஜேஸ்கண்ணன்), மத ஆசாரங்களுக்குள் ஒழிந்து வாழும் சாதியம்: கே.டானியலின் ‘கானல்’ நாவல் பற்றி (மு.அநாதரட்சகன்), யாழ்ப்பாணத்தில் இன்றைய நிலையில் சாதியம் (வேதநாயகம் தபேந்திரன்), சமவெளி தோறும் சமத்துவம் வேண்டும் (கவிதை-கந்தர்மடம் அ.அஜந்தன்), உயர்குடி மேலாதிக்கத்துக்கும் சாதியத்திற்கும் எதிரான தெணியானின் குரல் ‘மரக்கொக்கு’ (எம்.கே.முருகானந்தன்), நீதி தேவையல்ல (கவிதை-வ.வடிவழகையன்), நிர்ணயம் (சிறுகதை-சிவ ஆரூரன்), யாழ்ப்பாணச் சாதிக்கொதி (யோவேல் போல்), வர்க்க பேதம்-சாதி பேதம்: எண்ணெயும் தண்ணீரும் போன்ற உறவின் வீச்சு (ந.இரவீந்திரன்), ஒரு சமூகத்தின் விழிப்பும் மாற்றமும்: செங்கை ஆழியானின் ‘பிரளயம்’ (சு.குணேஸ்வரன்), படி (கவிதை-தெ.இந்திரகுமார்), ‘நீண்ட பயணம்’ நாவலின் ஊடாக வெளித்தெரியும் சாதியம்சார் அடக்குமுறைகள் (ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம்), வள்ளி திருமணம் (கதை-கந்தர்மடம் அ.அஜந்தன்), தெணியானின் ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சாதிய சிறுகதைகளை முன்வைத்து (லெனின் மதிவானம்), நீ.பி.அருளானந்தத்தின் ‘துயரம் சுமப்பவர்கள்’ (செங்கதிரோன்), சாதிய அடக்குமுறைக்கு எதிரான வினையாற்றலாக செ.கணேசலிங்கனின் ‘போர்க்கோலம்’ (அ.பௌனநந்தி), கணனி யுகத்தில் காட்டுமிராண்டியா? (கவிதை-கரவையூர் தயா), சாதியமும் புலிகளும் (அன்ரன் பாலசிங்கம்), அகஸ்தியரின் ‘எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ (எஸ்.செரஞ்சன்), எஸ்.சந்திரபோஸின் ‘தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி’ (சபா ஜெயராசா), நீர் பாடியது, கறுப்புக் கடல், ஒரு துளி நீர் (கவிதைகள்-சேரன்), ம.பா.சியின் ‘தழும்பு’  (இதயராசன்), வில்லூன்றி மயானம் (அ.ந.கந்தசாமி), வி.ஜெகநாதனின் சாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் (சுகு-ஸ்ரீதரன்), தெணியானின் ‘பொற்சிறையில் வாழும் புனிதர்கள்’ (மு.அநாதரட்சகன்), ஆக்க இலக்கியங்களுக்கும் அப்பால் சாதியம் பற்றிப் பேசும் சில நூல்கள் (என்.செல்வராஜா), தி.ஞானசேகரனின் ‘புதிய சுவடுகள்’ (அஷ்வினி வையந்தி), நாடு விட்டுப் போய்த்தான் என்ன (சிறுகதை-மு.தயாளன்), கதையின் கதை (என்.கே.ரகுநாதன்), தெணியானின் ‘விடிவை நோக்கி’ சில மனப்பதிவுகள் (அ.பௌநந்தி), காலத்திற்கும் புல மாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம்: சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ நூலை முன்வைத்து ஒரு பார்வை (சமுத்திரன்), முன்பொருநாள் சுட்ட வெடி (சிறுகதை-திரிசூலன்), ஒடுக்குமுறைகளின் எதிர்ப்புக் குரலென எழுந்த செங்கையாழியானின் ‘அக்கினிக் குஞ்சு’ எனும் குறுநாவல் பற்றிய பார்வை (மாவனல்ல ருஸ்னா நவாஸ்), தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் (ஜீவமுரளி), சிவா சின்னப்பொடியின் ‘நினைவழியா வடுக்கள்” (தர்மினி), புதிய பண்பாட்டியத்தைப் புகட்டும் ‘இரட்டைத் தேசமும் பண்பாட்டுப் புரட்சியும்’ (மா பாலசிங்கம்), என்.கே.ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ (க.நவம்), கே.டானியலின் ‘கோவிந்தன்’ ஒரு பார்வை (த.கலாமணி), சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம்: ஒரு புரட்சிகரமான ஐக்கிய முன்னணியை முன்னிறுத்தி (லெனின் மதிவானம்), தமிழின் தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் (பி.தயாளன்), தமிழர் சமுதாய சாதி அமைப்பினால் ஏற்படும் உள-சமூகப் பிரச்சினைகளும் பாதிப்புகளும் பற்றிய ஓர் ஆய்வு: வடமராட்சிப் பிரதேசத்தை மையமாகக் கொண்டது (க.பரணீதரன்), டொமினிக் ஜீவா: தலித் என்னும் தன்னுணர்வு (தர்மு பிரசாத்), முருகன் சின்னையா வாய்மொழி வரலாறு (க.பரணீதரன்), கணபதி சுப்பையா வாய்மொழி வரலாறு (க.பரணீதரன்), வெற்றியன் இராசரத்தினம் வாய்மொழி வரலாறு (க.பரணீதரன்), கந்தப்பு இராஜரட்ணம் வாய்மொழி வரலாறு (க.பரணீதரன்), பீ.ஜே.அன்ரனி வாய்மொழி வரலாறு (க.பரணீதரன்), சின்னட்டி செல்லத்துரை வாய்மொழி வரலாறு (க.பரணீதரன்), விசுவாசம் ஜெயநாதன் வாய்மொழி வரலாறு (க.பரணீதரன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இடையிடையே சாதிய அடக்குறை சார்ந்த 12 உண்மைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

ออนไลน์ เกมปลาและพอร์ตสหรัฐอเมริกา

บทความ เป็นพื้นฐานในการค้นหาข้อมูลส่วนตัวทั้งหมดของเรา! การตั้งค่าปัญหา: เกมเรียนรู้ตำแหน่งแพนด้า ความคิดเห็นและการให้คะแนนของคาสิโนอินเทอร์เน็ต Panda Grasp อัปเกรดแล้ว: ธันวาคม 2024 ทำไม Gamble Panda เรียนรู้บนอินเทอร์เน็ตจาก Glucose Sweeps? Ultra Panda Mobi บนอินเทอร์เน็ตเป็นผลิตภัณฑ์เกมออนไลน์อาหารทะเลที่แตกต่างซึ่งไม่เหมือนกับเกมปลา Panda Master เช่นเดียวกับแอปพลิเคชั่นเกมออนไลน์อาหารทะเลอื่น ๆ ส่วนใหญ่เช่น