17481 ஜீவநதி: ஆனி 2023: செ.யோகராசா சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

44 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 204ஆவது இதழாக 10.06.2023இல் வெளிவந்த இவ்வாளுமைச் சிறப்பிதழில், இலங்கையில் சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் பேராசிரியர் செ.யோகராசாவின் பங்களிப்பு (பாஸ்கரன் சுமன்), பேராசிரியர் செ.யோகராசாவின் முன்னுரைகளினூடாக ஈழத்து நவீன இலக்கியங்கள்-படைப்பாளர்கள்-தடங்கள் (த.மேகராசா), முஸ்லீம்களின் தமிழிலக்கியப் பணியினை முன்னிலைப் படுத்துவதில் பேராசிரியர் செ.யோகராசாவின் பங்களிப்பு (ரமீஸ் அப்துல்லா), மலையக களத்திலும் தளத்திலும் பேராசிரியர் செ.யோகராசா (சு.முரளிதரன்), ஈழத்து நவீன கவிதை ஆய்வு முன்னோடி பேராசிரியர் செ.யோகராசா (சி.ரமேஷ்), பேராசிரியர் செ.யோகராசா அவர்களின் அரியன தேடும் முயற்சியும் அவற்றின் முக்கியத்துவமும் (கோபாலப்பிள்ளை குகன்), பேராசிரியர் செ.யோகராசாவும் வாய்மொழி இலக்கியமும் (எம்.ஐ.எம்.ஹனீபா), இலக்கியத் தேட்டத்துத் தேனீ: பேராசிரியர் செ.யோகராசா (சு.குணேஸ்வரன்), மலையக மெல்லிசைப் பாடல் (செ.யோகராசா), அகதிகள்-சிறுகதை (செ.யோகராசா), இலக்கணத்தில் அக்கறை கொண்ட பேராசிரியர் செ.யோகராசா (த.யுவராஜன்), நற்குண நீராறு- கவிதை (ஜே.வஹாப்தீன்), செ.யோவும் நானும் (இ.சு.முரளிதரன்), இலக்கிய ஆளுமைகள் பற்றிய பேராசிரியர் செ.யோகராசாவின் ஆய்வுகள் (சின்னத்தம்பி சந்திரசேகரம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் செல்லையா யோகராசா வடமராட்சியில் கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1971இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி சிறப்புப் பட்டத்தினையும், 1972இல் இளந்தத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றவர். 1984இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தினையும் 1990இல் முதுகலைமாணிப் பட்டத்தினையும், 1999இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர். 1972-1975 காலகட்டத்தில் அஞ்சலதிபராகவும், 1976-1991 காலப்பகுதியில் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்றிய பின்னர் 1991 முதல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளராகவும், 2009 முதல் பேராசிரியராகவும் நியமனம் பெற்றுப் பணியாற்றியவர். 

ஏனைய பதிவுகள்

14560 அப்படியே இரு: தேர்ந்த கவிதைகள்.

அழ.பகீரதன். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, 62, காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில், 2வது பதிப்பு, மே 2017, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி,