க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
32 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 205ஆவது இதழாக 20.06.2023இல் வெளிவந்த இவ்வாளுமைச் சிறப்பிதழில் போராளிகளின் அகவுலகில் அசையும் ‘குப்பி’ (தீபச்செல்வன்), ‘போராளியின் காதலி’ வெற்றிச்செல்வியின் முதல் நாவல் (ஆதிலட்சுமி சிவகுமார்), ‘வெண்ணிலா’ போர்க்காலத்தில் உதிர்ந்து கல்லறையில் மலர்ந்த காதல் (கந்தர்மடம் அ.அஜந்தன்), ஒரு காலத்தின் வரம்-வெற்றி அக்கா (மிதயா கானவி), ‘இப்படிக்கு அக்கா’ துயரின் பெருமூச்சு (ந.குகபரன்), வெற்றிச்செல்வியின் ‘ஈழப்போரின் இறுதி நாட்கள்’ (வெற்றி துஷ்யந்தன்), எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் ‘முடியாத ஏக்கங்கள்’, ‘காணாமல் போனவனின் மனைவி’ சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து (மன்னார் அமுதன்), வெற்றிச்செல்வியின் ‘இப்படிக்கு தங்கை’ என்னும் படைப்பு மீதான பார்வை (சி.ரஞ்சிதா), நேர்காணல்- வெற்றிச் செல்வி (க.பரணிதரன்), கவிதைகள்: கிழக்கில் என்றும் வெளிச்சம், தோழியே, என்னருமைத் தோழியரே (வெற்றிச்செல்வி), சிறுகதை: சிறை (வெற்றிச் செல்வி) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.