க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய்,1வது பதிப்பு, ஆடி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
64 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 208ஆவது இதழாக 20.07.2023இல் வெளிவந்த மலையக ஆளுமைகள் சிறப்பிதழில், மலையகத்தைச் சேர்ந்தவர்களும் பன்முக ஆளுமைகளுடன் வாழ்ந்து மறைந்தவர்களுமான 18 பேரினைப் பற்றிய வாழ்வும் பணிகளும் பற்றிக் கூறும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் கோ.நடேசையர் (எம்.எம்.ஜெயசீலன்), தேயிலைத் தாயின் போராட்டங்கள்: அகமும் புறமும் (இரா.குறிஞ்சிவேந்தன்), மலையக நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி சி.வி.வேலுப்பிள்ளை (இரா.சடகோபன்), மொழிபெயர்ப்பு இலக்கியங்களினூடாக வெளிப்படும் சமூகச் சிந்தனைகள், கே.கணேஷின் ‘போர்க்குரல்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து (இராசலிங்கம் கனகேஸ்வரி), திருச்செந்தூரன் பாடங்களுக்கப்பால் சமூகத்தைக் காட்டிய ஆசான் (மு.சிவலிங்கம்), குறிஞ்சித் தென்னவனின் வாழ்க்கையும் இலக்கியப் பிரவேசமும் (மாரிமுத்து யோகராஜ்), என்.எஸ்.எம்.ராமையா (வி.எம்.இ.ரமேஷ்), தமிழோவியன் படைப்புலகம் (சுகந்தினி புவியரசன்), சக்தீ ‘சி.வி.’ யை தமிழுக்கு அறிமுகம் செய்த ‘சக்தீ’ (மல்லியப்பூ சந்தி திலகர்), பன்முக இலக்கிய ஆளுமையாளன் தெளிவத்தை ஜோசப் (ஆ.புவியரசன்), காலனிய கால மலையகம் சமூக உருவாக்கமும் அடையாள எழுச்சியும்: ‘தூரத்துப் பச்சை’ நாவலை முன்நிறுத்திய பார்வை (பாஸ்கரன் சுமன்), இலக்கிய வித்தகர் சாரல்நாடன் நம் காலம் கண்ட முதுசொம் (சு.முரளிதரன்), மலையகக் கவிதை வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்திய அரு.சிவானந்தத்தின் ‘சென்று வருகிறேன் ஜென்ம பூமியே’ (ஜெ.சற்குருநாதன்), ஒரு பன்முகப் படைப்பாளர் சி.பன்னீர்செல்வம் (மு.சி.கந்தையா), தொழிலாளர்களின் எதிர்ப்புக் குரல்கள் மல்லிகை சி.குமார் அவர்களின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட குறிப்பகள்(சிவ.இராஜேந்திரன்), காலமும் மனிதர்களும் சாந்திகுமாரின் எழுத்துக்கள் பற்றிய மதிப்பீடு (சு.தவச்செல்வன்), ‘இறவா புகழோடு’ ஜெயராமன் லெனின் மதிவானம் (சை.கிங்ஸ்லி கோமஸ்), நாடகக் கலைஞர் மாத்தளை கார்த்திகேசு (தெளிவத்தை ஜோசப்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.