க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 210ஆவது இதழாக 10.08.2023இல் வெளிவந்த அந்தனி ஜீவா சிறப்பிதழில், அந்தனி ஜீவா: மலையகப் பெண் எழுத்துக்களைத் தொகுத்த முன்னோடி (எம்.எம்.ஜெயசீலன்), அந்தனி ஜீவாவின் நூல் பதிப்பு முயற்சிகள்: ஒரு பார்வை (சு.முரளிதரன்), அந்தனி ஜீவாவின் வித்தியாசமான மானுட சித்திரங்கள் (ஈழக்கவி), அந்தனி ஜீவாவின் குறிஞ்சி மலர்களின் மணம் (காரைக்கவி கந்தையா பத்மானந்தன்), அந்தனி ஜீவாவின் ‘ஈழத்தில் தமிழ் நாடகம்’ (நா.வானமாமலை), அந்தனி ஜீவாவின் ‘தலைநகரில் தமிழ் நாடக அரங்கு’ (த.கலாமணி), ‘மலையகமும் இலக்கியமும்’ சில குறிப்புகள் (திக்குவல்லை கமால்), மலையக இலக்கிய தொழிற்சங்க வரலாற்றை ஆவணப்படுத்திய அந்தனி ஜீவா (முருகபூபதி), தன் வரலாறு பேசும் சிறகு விரிந்த காலம் (அஸ்வினி வையந்தி), அந்தனி ஜீவாவின் ‘காந்தி நடேசையர்” (இர.சிவலிங்கம்), ‘கொழுந்து’ பாதையும் பயணமும் (எம்.எம்.ஜெயசீலன்), மலையக கலை இலக்கியத்தின் மறுமலர்ச்சிப் பாதையில் வரலாற்றுச் சுவடுகளாக அந்தனி ஜீவாவின் ‘ஒரு வானம்பாடியின் கதை’ (கச்ந்தர்மடம் அ.அஜந்தன்), ‘திருந்திய அசோகன்’ சிறுவர் நாவல் (வர்மா), அந்தனி ஜீவாவும் நானும் (வதிரி சி.ரவீந்திரன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.