17486 ஜீவநதி: ஆவணி 2023: அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

40 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 211ஆவது இதழாக 20.08.2023இல் வெளிவந்த அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி சிறப்பிதழில், ‘பல்கலைக்கழக நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் 8-4-1961-25.12.2019’ என்ற தலைப்பிலான நூலியலாளர் என்.செல்வராஜா அவர்களின் அறிமுகக் கட்டுரையுடன், அமரர் ஸ்ரீகாந்தலட்சுமி எழுதிய பல்வேறு ஆக்கங்களையும் தொகுத்து இச்சிறப்பிதழை உருவாக்கியுள்ளனர். ஈழத் தமிழ்ச் சமூகமும் ஆவணவாக்கமும் (கட்டுரை), அழகு (கவிதை), எப்படி வந்தது (கவிதை), வதையின் விதை (சிறுகதை), அழைப்பு மடல் (கவிதை), தமிழ்ச் சமூகமும் பெண்களும் அனுபவங்களும் மற்றும் அவதானிப்புகள் வழியான சமூக நோக்கு (கட்டுரை), அண்ணி (சிறுகதை), ஏ.ஜே. நான் கண்ட முகம் (கட்டுரை), காத்திருப்பு (கவிதை), இருப்பு (கவிதை), சூரியப் புதல்விகள்: பாடல்கள் பற்றியதொரு பார்வை (விமர்சனம்), நான் ஒரு புதினம் (கவிதை), புலர்வு (கவிதை), நிறையவே இருக்கிறது இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள (கட்டுரை), விழுதாகி வேருமாகி: பார்வையும் பதிவும் (விமர்சனம்), எங்கிருந்து கற்றாய் நீ? என் இனிய தோழி! (கவிதை) ஆகியஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Fantastic Give Position

Content What is the Rtp To have Wonderful Concert tour? | slot cricket star Ideas on how to Enjoy Golden Concert tour Position? Cards Gametables