க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, புரட்டாதி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
44 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 214ஆவது இதழாக 20.09.2023இல் வெளிவந்த க.பாலேந்திரா சிறப்பிதழில், க.பாலேந்திரா ஒரு நாடக இயக்கம் (ப.ஸ்ரீஸ்கந்தன்), தொடர் அரங்காற்றுகையின் அடையாளம் நாடகர் க.பாலேந்திரா (சோ.தேவராஜா), பாலேந்திரா என்றொரு கலைஞன் (அ.யேசுராசா), நவீன நாடக இயக்குனர் க.பாலேந்திரா (சத்தியமூர்த்தி மாணிக்கம்), ‘யுக தர்மம்’ இலங்கை தமிழ்நவீன நாடகத்துறையின் முன்னோடி முயற்சி (மன்ஸூர் மொஹமட்), க.பாலேந்திராவின் கண்ணாடி வார்ப்புக்கள் (சித்திரலேகா மௌனகுரு), பாலேந்திரா ஆனந்தராணி தம்பதியின் கலைப்பயணம் (மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம்), கண்ணும் கருத்தும் கருமமும் ஆயினார் (குழந்தை ம.சண்முகலிங்கம்), நேர்காணல்- க.பாலேந்திரா (க.பரணீதரன்), பார்வையாளர்கள்-நாடகம் (க.பாலேந்திரா) ஆகிய படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட க.பாலேந்திரா மொரட்டுவை (கட்டுபெத்த) பல்கலைக்கழகத்தில் கற்று பொறியியலாளராகப் பணியாற்றியவர் தற்போது பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகின்றார். பல்கலைக்கழகக் காலத்திலேயே தனது நாடகத்துறைப் பயணத்தைத் தொடங்கிய இவர் 1978இல் அவைக்காற்றுக்கழகத்தை உருவாக்கி அவ்வமைப்பின் ஊடாக 45 ஆண்டுகளாக தொடர்ந்து நாடகங்களை மேடையேற்றி வருகின்றார்.