17488 ஜீவநதி: புரட்டாதி 2023: சிவ.ஆரூரன் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, புரட்டாதி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

32 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29.5×20 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 214ஆவது இதழாக 20.09.2023இல் வெளிவந்த சிவ.ஆரூரன் சிறப்பிதழில், கூண்டுப் பறவை சிவ ஆரூரனின் நாவல் ‘யாழிசை’ போர் தின்ற வாழ்வின் ஒரு முகம் (எம்.கே.முருகானந்தன்), மூன்று கவிதைகள்: உலக தர்மம், பயன்படல், மனிதநோக்கு (சிவ ஆரூரன்), கேடயம்- சிறுகதை (சிவ ஆரூரன்), சிவ ஆரூரனின் ‘யாவரும் கேளிர்’ (இதயராசன்), தன்னை ஈந்து கனிந்த படைப்பு மனம் சிவ ஆரூரனின் ‘பூமாஞ்சோலை’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து (மு.அநாதரட்சகன்), கவிதைகள்: ஏய்ப்பு, ஆதங்கம், புகழ் மயக்கம், நம்பிக்கை (சிவ ஆரூரன்), புரிந்துணர்வைப் போதிக்கும் படைப்பு சிவ ஆரூரனின் ‘ஊமை மோகம்’ (சு.குணேஸ்வரன்), சிவ ஆரூரனின் சிறை வாழ்வுக்கு முந்திய அனுபவங்களைப் பேசும் ‘மௌனத்தின் சலனம்’ சிறுகதைத் தொகுதி குறித்த பார்வை (புலோலியூர் வேல் நந்தகுமார்), நேர்காணல்- சிவ ஆரூரன் (க.பரணீதரன்), எனது பார்வையில் ஆதுரசாலை (எஸ்.பஞ்சகல்யாணி), கவிதைகள்: நுகர்வுப் பண்பாடு, கடமை, காதல், பக்தி, விமர்சனம், சலுகை, முயற்சி, பலத்தின் பலவீனம் (சிவ ஆரூரன்), சிவ ஆரூரனின் வலசைப் பறவைகள் (கரவை மு.தயாளன்), The Innocent Victims (சோ.பத்மநாதன்), சிவ ஆரூரனின் ‘வெண்மேகத்தின் பாதை’ (இ.சு.முரளிதரன்), ஆகிய படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்