க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
30 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 223ஆவது இதழாக 20.12.2023இல் வெளிவந்த இடர்காலக் கவிதைகள் சிறப்பிதழில் 30 பெண் படைப்பாளிகளின் தேர்ந்த இடர்காலக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இப்படைப்பாளிகளில் பலர் ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் நின்றவர்கள். அவர்களின் மனதில் தோன்றிய உணர்வலைகளை எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். அம்பலகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில் (தமிழினி), நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை (அம்புலி), வல்லரசுகள் (கஸ்தூரி), அன்னை நிலம் (கௌதமி), பஞ்சுப் பாதம் மெல்லப் பதித்து (வலம்புரி), எனக்கும் புரிகிறது (தூயவள்), மௌனத்துள் துயரம் (நா.நாமகள்), எப்போது விடியும் என் இரவு (செந்தணல்), ஒரு கிராமத்தின் எச்சங்கள் (சுதாமதி), என் அகத்தின் பாடலிது (அலையிசை), வையகம் வசப்படட்டும் (தமிழவள்), மௌன ஆன்மா (விண்ணரசி), காத்திருப்பு (சோழநிலா), பதுமைகள் அல்ல (மாதவி), விடியலை நோக்கி (மிதயா கானவி), ஊர் மீட்டு வருவோம் (புரட்சி நிலா), உணர்ந்துகொள் (பொன்னிலா), நிச்சயம் இது நிலைக்கும் (புதியவள்), காத்திருப்பு (சமர்விழி), புதிய தோழி எம் பின்னால் வருகிறாள் (உதயலட்சுமி), நேசராச்சியம் (மலைமகள்), கடலலையே நீ கூறு (பாரதி), நாமும் நாளையும் (அநாமிகா), எடுப்போமே சபதம் (கிருபா), அர்ச்சனைப் பூக்களின் ஆசைகள் (பல்லவி), அவன் ஒருவனே கதாநாயகன் (பிரபா அன்பு), தாயவளை மீட்கவென்று (உலகமங்கை), எனது பேனா (வானதி), கிழக்கில் என்றும் வெளிச்சம் (வெற்றிச்செல்வி), சோகம் (தமிழ்க்கவி) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இங்கு பதிவாகியுள்ளன.