க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
32 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 222ஆவது இதழாக 10.12.2023இல் வெளிவந்த என்.செல்வராஜா சிறப்பிதழில், ஈழத்துப் புத்தகங்களின் தகவல் பெட்டகம் என்.செல்வராஜா (குலசிங்கம் வசீகரன்), என்.செல்வராஜாவின் ‘நமக்கென்றொரு பெட்டகமும்’ நூலகச் சிந்தனைகளும் (அருண்மொழிவர்மன்), நூலகர் நடராஜா செல்வராஜாவின் வாழ்வும் பணிகளும் (முருகபூபதி), நூலகர்களின் பணிகளைப் பதிவுசெய்யும் ‘நான் கண்ட ஈழத்து நூலக ஆளுமைகள்” (எஸ்.சத்தியதேவன்), வாய்மொழி வரலாறு- என்.செல்வராஜா (பதிவு-பத்திநாதர் கனொல்ட் டெல்சன்), நூலகத்தின் செயற்பாடுகளில் நடராஜா செல்வராஜா அவர்களின் பங்களிப்பு (மியூரி கஜேந்திரன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1980களிலிருந்து ஈழத்தில் நூலகவியற்துறையைத் தமிழில் வளர்த்தெடுத்து வரும் முன்னோடி நடராஜா செல்வராஜா ஆவார். இவரது உருவாக்கத்தில் 1985 முதல் ஏழாண்டுகள் தொடர்ச்சியாக வெளியான ‘நூலகவியல்’ காலாண்டிதழ் இன்றளவில் ஈழத்தில் வெளிவந்த ஒரேயொரு நூலகவியல்துறைசார் சஞ்சிகையாகக் காணப்படுகின்றது. 1980அவர் இலங்கையில் இருந்தவேளை ‘நூல்தேட்டம்’ என ஈழத்து தமிழ் நூல்களைப் பட்டியலாக்கும் காலாண்டு சஞ்சிகை முயற்சியைத் தொடங்கினார். புலம்பெயர்ந்த பின்னர் அதன் விரிவாக்கமாக 2002இல் இருந்து தொகுதிக்கு ஆயிரம் நூல்கள் வீதம் 2024வரை 17 தொகுதிகளில் 17,000 நூல்களை குறிப்புரையுடன் நூல்தேட்டத்தில் பதிவுசெய்திருக்கிறார். மௌனமாய்ப் பொழியும் மாமழை என்ற நூலில் இவரது வாழ்வும் பணியும் மிக விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவரது படைப்பில் இதுவரை 69 நூல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் பல நூல்கள் வெளிவரத் தயாராகவுள்ளன. ஈழத்துத் தமிழர் வரலாற்று மூலங்களை ஆவணப்படுத்தும் இவரது மற்றொரு பெரும்பணியின் பயனாக யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு, ஈழநாடு: ஒரு ஆலமரத்தின் கதை, நினைவுகளே எங்கள் கேடயம் (நான்காவத உலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய ஆவணத்தொகுப்பு), வீரகேசரியின் பதிப்புலகம் எனப்பல ஆவணத்தொகுப்புகள் எமக்குக் கிட்டியுள்ளன.