க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2025. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
52 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 251ஆவது ஆளுமைச் சிறப்பிதழாக 05.01.2025இல் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து இலக்கியப் படைப்பாளியான ஆசி.கந்தராஜா பற்றிய பல்வேறு தமிழிலக்கியவாதிகளின் மலரும் நினைவுகளும், அவரது படைப்பாக்கங்கள் பற்றிய அறிமுகங்களும் திறனாய்வுகளும் இடம்பெற்றுள்ளன. இவ்விதழில் ஈழக்கவி, இ.சு.முரளிதரன், சு.குணேஸ்வரன், புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், கந்தர்மடம் அ.அஜந்தன், குமாரவேலு கணேசன், செல்லையா சுப்பிரமணியம், சௌந்தரி கணேசன், சிவகுருநாதன் கேசவன், அலைமகன், ரஞ்ஜனி சுப்பிரமணியம், புலோலியூர் வேல் நந்தகுமார் ஆகியோரி;ன் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.