ஏ.சீ.இஸ்மா லெவ்வை. சம்மாந்துறை: தேசிய கலை இலக்கிய தேனகம், 48, ஹிஜ்ரா 4ஆம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சம்மாந்துறை: ஷம்றா அச்சகம், அம்பாரை வீதி).
161 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு: 21×14.5 சமீ.
காதல், கல்வி, சமயம், அரசியல் எனப் பல்துறை கருப்பொருள்களையும் உள்ளடக்கியுள்ள 64 மரபுக் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கலாபூஷணம் ஏ.சீ.இஸ்மா லெவ்வை யாத்துத் தொகுத்தளித்துள்ள இக்கவிதைகளில் நீண்டகாலமாக சமூக வாழ்வில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், நீண்டகால ஆசிரிய அதிபர் சேவைகளில் அவர் பெற்ற அனுபவங்கள், தமிழ் மொழியின் உயர்தரமான பிரயோகங்கள் என்பன காணப்படுகின்றன. கவிதைகளில் கிராமிய வழக்கு, மண் வழக்கு என்பன இழையோடிச் சுவையூட்டுகின்றன. சில இடங்களில் தத்துவக் கருத்துகள் தொனிக்கின்றன. ஆசிரியரின் சமய ஈடுபாடு கவிதைகளின் வழியாகப் புலப்படுகின்றன. இவை பெரும்பாலும் சமூக ஒழுக்கத்திலும், விழுமியங்களிலும் அவர் கொண்ட பற்றுறுதியைக் காட்டுவனவாக உள்ளன. பாரம்பரிய யாப்பு வடிவங்களையே இக்கவிஞர் கையாண்டுள்ளார். கவிதை சொல்லும் முறையிலும் பாரம்பரிய உத்திகளையே இவர் பெரிதும் பயன்படுத்தியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119583).