சி.கிருஷ்ணபிரியன். கொழும்பு: Opiuma Publications, Transleft Lanka, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (நுகேகொட: எப்பெக்ஸ் பிரிண்ட்ஸ் அன்ட் கிரப்பிக்ஸ், இல.9/7, வனாத்த வீதி, கங்கொடவில).
80 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-98713-1-1.
சுதந்திரத்துக்குப் பின்னைய காலம் தொட்டு பிளவுண்ட ஒரு சமூகம் ஒரே குரலில் பேசமுடியாது என்பதையும் அவ்வாறு ஒரு குரலை உருவாக்க முனையும் போது பெரும்பாலானோரது நலன்கள் புறக்கணிக்கப்படுவது தவிர்க்கப்படவியலாதது என்பதே இலங்கை அனுபவம். பரந்துபட்ட மக்களின் பல்வேறு குரல்களிடையே உள்ள ஒற்றுமைகளை அடையாளம் கண்டு அதை வலியுறுத்துவதன் மூலமே நியாயத்துக்கான போராட்டத்தை வலிமைப்படுத்தவும் அதற்கான ஆதரவை விரிவுபடுத்தவும் இயலும். ‘ஒபியும’ இணைய மின்னிதழின் முயற்சியாக உருவாக்கப்பட்ட இக்கவிதைத் தொகுதி அதற்கான ஒரு வழியை ஏற்படுத்தித் தந்துள்ளது. தமிழ் மக்களின் பண்பாட்டு வெளிப்பாடுகளையும் எண்ணவோட்டங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், இன ஒடுக்குமுறையானது போராக வெளிப்பட்டதன் வடுக்களையும், தமிழர்கள் மீதான அழுத்தங்கள் அடக்குமுறைகளையும் வெளிப்படுத்துவனவாக இக்கவிதைகள் உள்ளன. வே.தினகரன், கயூரி புவிராசா, நஃபீல், சண்முகம் சிவகுமார், வேலணையூர் ரஜிந்தன், மோகன தர்ஷினி, கமலாபரன், லுணுகலை ஸ்ரீ, சிவனு மனோஹரன், சத்திய மலரவன், ஃபிரான்சிஸ் திமோதிஸ், சத்தியபிரபா, ஜீ.ஜெயபிரசாந்தி, மா.ஜீவன், ரீஸா ஹனி, செம்மலர் மோகன், க.ஜெயகாந்த், ர.வித்யாளினி, மா.சசிரேகா, தி.எஸ்.அனோஜன், இரா.வனிதா, சி.கிருஷ்ணபிரியன் ஆகிய 22 கவிஞர்களுடைய 37 கவிதைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.