17504 அலையோடு நீராடு.

சங்கரி சிவகணேசன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

120 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6601-18-8.

புதிய உவமைகளையும் நடைமுறைக் காட்சிகளையும் தனது கவிதைகளிலே தந்து வாசகரைத் தன்பால் ஈர்க்கும் இக்கவிதைத் தொகுதி இக்காலச் சமூகத்திற்கு பல செய்திகளைச் சொல்கின்றது. நல்ல கவித்துவ ஆளுமையுள்ள சிறந்த பெண்கவிஞராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார் சங்கரி. இலங்கையைப் பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்தை வாழிடமாகவும் கொண்டவர் சங்கரி சிவகணேசன். உன் நிலம் நோக்கி நகரும் மேகம், அரூப நிழல்கள், மடை திறக்கும் மௌனம் ஆகிய மூன்று கவிதை நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் இவரது நான்காவது நூல் இதுவாகும். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 398ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

17194 கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையும் பெண்களும்.

சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல.07, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டர்ஸ், இல. 717, காங்கேசன்துறை வீதி). iv, 66 பக்கம், விலை: