சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், மிருசுவில், 1வது பதிப்பு, 2016. (தென்மராட்சி: மாதுளன் பதிப்பகம், உசன் சந்தி, மிருசுவில்).
(7), 44 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூலில் சூரியநிலாவின் 78 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் சூரியநிலாவின் நீண்டகாலக் கவித்துவ ஆவலின் வெளிப்பாடாகவே இந்நூல் அமைந்துள்ளது. 1998இல் கவிதை உலகில் பிரவேசித்த சூரியநிலா, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க யாழ் மாவட்டக் கிளையின் எயிட்ஸ் தடுப்பு திட்ட இணைப்பாளராகப் பணிபுரிந்தவர். பின்னாளில் ஒரு பொது சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றியவர். பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நூல்களையும் பின்னாளில் இவர் எழுதியுள்ளார்.