17507 அன்றில் பறவைகளாய்.

வெண்ணிலா விஜயலக்ஷ்மன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

102 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-88-7.

வெண்ணிலா விஜயலக்ஷ்மன் எழுதிய ஐம்பது கவிதைகளை கொண்ட தொகுப்பு இது. வெண்ணிலா பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம் ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவியாவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்று பட்டதாரியாகியவர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஆங்கில தொண்டர் ஆசிரியராகவும், யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியில் போதனாசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், சப்ரகமுவ பல்கலைக் கழகத்திலும் வருகைதரு விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் 18 வருடங்களுக்கும் மேலாக நிரந்தர போதனாசிரியராகவும் கடமையாற்றி இப்போது அமெரிக்காவில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 366ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72266).

ஏனைய பதிவுகள்

Rating 45M Free Coins

Posts Zero down load necessary – slot Fruit Cocktail Gamble 100 percent free slots and you can victory a real income A lot more Required