எஸ்.ஆர்.தனபாலசிங்கம். திருக்கோணமலை: எஸ்.ஆர்.தனபாலசிங்கம், 43/4, சனல் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆடி 2023. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிரின்டர்ஸ்).
xii, (5), 77 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 19×12 சமீ., ISBN: 978-955-53138-2-7.
திருக்கோணமலையிலிருந்து ‘நீங்களும் எழுதலாம்’ என்ற பெயரில் கவிதைக்கான சிற்றிதழை 2007இலிருந்து வெளியிட்டு வரும் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. இதில் புதிய குழந்தை, இரவில் ஒரு மரதன் ஓட்டம், ஒட்டுமரம், உறங்கும் நகரம், இனியொரு யுத்தம் வேண்டாம், ஏக்கங்கள், பொறுமை காத்திடும் வரை, எங்களுக்கான, இங்கிருந்தே, மானுடம் நோக்கிய சுயம், விழிக்குமா எம் தேசம்?, கிறுக்கர்களும் கிறுக்கல்களும், உனக்கான அடையாளம்?, ஆடுகளும் ஓநாய்களும், தீர்மானிக்கப்பட்ட பிரகடனங்கள், மீட்பின் பெயரால், அலங்கோலமாய், புதிய ஜனநாயகமே, வெற்றுப் பிதற்றல்கள், தகுதி, தூசு படியும் காற்று, எல்லாமுமாகுக, எங்கள் காவலர்கள், சரியெனப்பட்டது, அவதி, அடக்கம், மிச்சம், திருவுடையார் எனப்படுவோர் ஆடல், போலப்படுபவை, நவநவமாய் புலராப் பொழுது, இன்றைய விநோதங்களில், ஏக்கப் புள்ளிகள், கொடிய சாபம் கொவிட், பெரும் கதிரைகள், என்று தானோ?, அகம் பெயர்தல், வேர்கள், பலிபீடம், வழி, ஒரு தருணம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன.