பிரபா அன்பு. சென்னை 600008: எழிலினி பதிப்பகம், 15A, முதல் மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், 1வது பதிப்பு, 2021. (சென்னை 600008: எஸ்.ஆர்.என்டர்பிரைசஸ்).
(20), 106 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-92224-10-2.
ஆசிரியரின் கன்னிக் கவிதைத் தொகுப்பு இது. ஈழமண்ணில் நடந்து முடிந்த யுத்தத்தில் மரணித்துப்போனவர்களையும், காணாமல் போனவர்களையும், காணாமல் அக்கப்பட்டோரையும், அக்காலப் பகுதியில் எம்மக்கள் அனுபவித்த துயரங்களையும், அதற்குப் பிற்பட்ட காலங்களில் மக்கள் அனுபவிக்கும் துயரங்களையும் தன் கவிவரிகளில் எழுதியிருக்கிறார். யுத்தம் முடிவுற்ற பிற்பட்ட காலங்களை கடந்து செல்கின்றபோது அழியாமல் நிழல்போல் தொடரும் இழப்புகளின் நினைவுகள் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. அவை நிழல்போல் எம்மோடு தொடர்ந்தபடியே உள்ளன. அவற்றின் ஏக்கங்களையும் வலிகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்கின்றது. பிரபா அன்பு, இணையத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக தமிழ் சமூக மறுமலர்ச்சி தொடர்பான படைப்புகளையும் செய்திகளையும் உலகிற்கு தன் எழுத்துக்களின் வாயிலாக கடந்த பத்தாண்டுகளாக வழங்கிவருகின்றார். ஐ-வின்ஸ் (ivins) என்ற சமூக இணையத்தளத்தில் ஊடகவியலாளராகப் பணியாற்றுகின்றார்.