ஆ.லெ.மு.இர்ஷாத், பொம்மிடி மோகனதாஸ். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜ{ன் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
64 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-0958-84-9.
வாழைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கிழக்குப் பல்கலைக் கழகப் பட்டதாரியுமான இந்நூலாசிரியர் புதிய தலைமுறைக் கவிஞர். ஹைக்கூ கவிதை வடிவம் ஆக்கமாகவும், கட்டுரையாகவும் ஆய்வாகவும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பரிமாணங் கண்டுள்ள நிலையில் இவர் முன்னதாக வெளியிட்டுள்ள ‘ஒளி பூக்கும் இரவு’, ‘பூக்களோடு சில நிமிடம்’ ஆகிய ஹைக்கூ, புதுக் கவிதை நூல்களைத் தொடர்ந்து, விரிந்த வீச்செல்லையுடன் கூடிய மூன்றாவது கவிதைத் தொகுதியாக ‘இரண்டாம் நிலா’ வெளிவந்துள்ளது. இந்நூலின் மூன்று சிறப்பம்சங்களாவன, ஹைக்கூவிலிருந்து தோன்றிய சென்ரியூ ஹைக்கூவின் ஈழத்தில் தோன்றிய முன்னணித் தொகுப்பாகவிருப்பதும், தமிழிலும் ஆங்கிலத்திலும் இக்கவிதைகள் ஒரே நூலில் இடம்பெற்றிருப்பதும், ஆக்கம் மொழிபெயர்ப்பு என்று இரு வெவ்வேறு நாட்டுக் கவிஞர்கள் இணைந்தெழுதிய தொகுப்பாகவிருப்பதுமாகும். இந்நூலில் அத்தகைய 129 சென்ரியூ ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 364ஆவது நூலாக வெளிவந்துள்ளது.