17512 இருட்டின் காதலி.

காயத்ரி ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: திருமதி காயத்ரி ஸ்ரீதரன், 1வது பதிப்பு, ஜுலை 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

108 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×13 சமீ., ISBN: 978-624-93757-0-3.

ஈழத்து ஒவியர் அமரர் ஆசை இராசையாவின் மகள் காயத்ரியின் முதலாவது கவிதை நூல் வெளியீடு இது. காயத்ரி தென்னிந்தியாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பரத நாட்டியக் கலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில்  முதுமாணிப் பட்டத்தினையும் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்ற நடனக் கலைஞர். வடமாகாணக் கல்வி அமைச்சின் பண்பாட்டு அலகில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணிபுரிந்தவர்.

ஏனைய பதிவுகள்