இரா.கிருஷ்ணபிள்ளை (புனைபெயர்: இராகி), இராகி. இளம்குமுதன் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: மலரகம், நடராஜானந்தா வீதி, காரைதீவு-2, 1வது பதிப்பு, 2023. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம், கொக்குவில்).
(6), 71 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5 சமீ.
‘இறையடி இணைமாலை’ என்ற இக்கவிதைத் தொகுப்பானது கவிஞர் கலாபூஷணம் அமரர் இரா.கிருஷ்ணபிள்ளை அவர்களது 13ஆவது நூலாகும். இவரது கவிதைத் தொகுதிகளில் நான்காவது தொகுதியாக வெளிவந்துள்ளது. அவர் வாழ்ந்தவேளை வெளியிடப்பட்ட கவிதைத் தொகுதிகளில் இடம்பெறாத கவிதைகளைத் தேடித்தொகுத்து இந்நூலை அவரது மகன் இராகி. இளம்குமுதன் அவர்கள் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவாக பதிப்பித்துள்ளார். அமரர் இரா.கிருஷ்ணபிள்ளை பாண்டிருப்பில் 15.09.1939இல் பிறந்தவர். 1961இல் பாண்டிருப்பு அரச தமிழ் கலவன் பாடசாலையில் உதவி அசிரியராகப் பணியில் இணைந்த இவர், 1963இல் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் பயிலுனர் ஆசிரியராக பயிற்சிபெற்று, 1965இல் ஹட்டன் ஹைலண்ட் கல்லூரியில் பயிற்றப்பட்ட உதவி ஆசிரியராகப் பணியில் இணைந்தார். தொடர்ந்து லுணுகலை, அக்கரைப்பற்று, காரைதீவு ஆகிய இடங்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் 1982இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு, பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராக காரைதீவு விபுலாநந்தா தமிழ் மகாவித்தியாலயம் (1983), நிந்தவூர் அல் அஷ்றக் மகாவித்தியாலயம் (1984) ஆகிய பாடசாலைகளில் பணியாற்றினார். பின்னர் 1988இல் கல்முனை மல்வத்தை விபலாநந்தா வித்தியாலயத்தில் அதிபராகவும், 1989இல் காரைதீவு விபுலாநந்தா மத்திய மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் பணியாற்றினார். 16.12.1996இல் சேவை ஓய்வுபெற்ற இவர் 20.09.2022இல் காரைதீவில் தனது தாய்மண்ணில் இறைபதமெய்தினார்.