17517 உதயப் பொழுதும் அந்தி மாலையும்: தேர்ந்த கவிதைகள்.

எம்.ஏ.நுஃமான். ஐக்கிய இராச்சியம்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந் தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், லண்டன்,

1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600077: மணி ஓப்செட்).

(8), 456 பக்கம், விலை: இந்திய ரூபா 600., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-81-962275-6-2.

1944இல் கிழக்கலங்கை கல்முனையில் பிறந்த எம்.ஏ.நுஃமான், உலக அரங்கில் நன்கறியப் பெற்றதொரு மொழியியலாளரும் கவிஞரும் இலக்கிய விமர்சகருமாவார். தனது வாழ்வின் காலத்தை ஐந்து பிரிவுகளாக வகுத்து, ‘உதயம்’ என்ற முதலாவது பிரிவில் 1962-1964 காலகட்டத்தில் தான் எழுதிய 30 கவிதைகளையும், ‘முற்பகல்’ என்ற இரண்டாவது பிரிவில் 1965-1969 வரையிலான காலகட்டத்தில் எழுதிய 50 கவிதைகளையும், ‘நண்பகல்’ என்ற மூன்றாவது பிரிவில் 1970-1979 காலகட்டத்தில் எழுதிய 20 கவிதைகளையும், ‘பிற்பகல்’ என்ற நான்காவது பிரிவில் 1980-1999 காலகட்டத்தில் எழுதிய 34 கவிதைகளையும், ‘அந்திமாலை’ என்ற  ஐந்தாவது பிரிவில் தான் 2000-2022 காலகட்டத்தில் எழுதிய 22 கவிதைகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். படிமுறையில் வளர்ச்சியுற்ற நுஃமானின் கவிப்புலமையை ஒழுங்குமுறையில் தரிசிக்க இத்தொகுப்பு வழிவகுத்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72581).

ஏனைய பதிவுகள்