சங்கரி சிவகணேசன். சென்னை 600008: எழிலினி பதிப்பகம், 15A, முதல் மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், 1வது பதிப்பு, 2022. (சென்னை 600008: எஸ்.ஆர். என்டர்பிரைசஸ்).
xxx, 140 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-89-392224-26-3.
‘கண்கள் அறியாமல், இமைகளுக்கு கொடுக்கப்படும் முத்தங்கள் போல, நான் அறியாமல் என் ஆன்மா கற்பனைகளின் களிப்பில் லயிக்கும்போது என்னைச் சந்தித்துக்கொள்ளும் வார்த்தைகளை ஆலாபனை செய்துகொள்வேன். எண்ணங்கள் அருந்தும் அருவங்களை, உருவங்களாக மனது ஏற்றுக்கொள்ள தனிமைக்கு விரல்கள் முளைத்து படைப்பாக்கும் ஓர் உன்னத கலையை அழகின் படிமமாக நெய்யத் தொடங்கிவிடுகிறது. இப்படியாக நெய்யப்பட்ட என் கவிதைகள் அரிதாரமாக மௌனத்தைப் பூசிக்கொள்வதனாலே இங்கு காதலுக்கு மௌனத்தின் சாயல். தனிமையில் கொஞ்சம் கற்பனையில் மிதந்து சிந்தையில் சிக்கிக்கொள்ளும் வார்த்தைகளை சிந்தாமல் சிதறாமல் எழுதிமுடிக்கும் வரை மறந்து போகாமலிருக்கும் கவிதைகளைப் படைப்பது ஒரு தவம். இடையில் பிறிதொரு சிந்தனையில் புகாமல், கவிதையின் கருவும் கலையாமல் கவிதையோடு பயணிப்பது இன்பம். எழுதி முடிக்கும்வரை கவிதையோடு கவிதையாய் வாழ்வதென்பது வரம். இப்படியாகத்தான் நான் வரம்பெற்று வந்து பிரசவித்த கவிக் குழந்தைகளை நூலாகத் தொகுத்துள்ளேன்.’ (ஆசிரியர்).