சுந்தரலிங்கம் நிருத்திகன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 82 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-72-6.
நூலாசிரியர் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கைத்தொழில் அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றியவர். சமூகசேவைகளில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் தான் சந்தித்த மனிதர்களை, அவர்களது சமூகப் பிரச்சினைகளை கவிதைகளாக வடித்துள்ளார். 2012 இலிருந்து இவர் ‘சிவமைந்தன்’, ‘நிஜாத்கான்’ போன்ற புனைபெயர்களில் ஊடகங்களில் தன் கவிதைகளை இடம்பெறச் செய்துவந்தார். அவற்றின் தேர்ந்த தொகுப்பாக வெளிவரும் இக்கவிதைத் தொகுதியில் இளவயதிலேயே அமரத்துவமடைந்துவிட்ட நிருத்திகனின் 200 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் குறுங்கவிதைகள், நெடுங்கவிதைகள், என்பன உள்ளடங்கியுள்ளன. இவரது பல கவிதைகள் சமூகத்திலுள்ள பிரச்சினைகளை முன்னிறுத்தியவையாக அமைந்துள்ளன. போர், பெண்ணியம், சமூக மாற்றம், காதல், வறுமை, கல்வி, சகோதர பாசம், இன-மத நல்லிணக்கம்,ஆன்மீகம், போதை பற்றிய விழிப்புணர்வு, தாயன்பு, மனிதநேயம், சமத்துவம், ஒழுக்கம், நட்பு, தமிழ் மீதான பற்று, கல்வியின் முக்கியத்துவம் என இவரது கருப்பொருள்கள் விரிந்து செல்கின்றன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 182ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 102473).