17522 எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?.

இளவாலை விஜயேந்திரன் (இயற்பெயர்: தியாகராஜா விஜயேந்திரன்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, இணை வெளியீடு, ஐக்கிய இராச்சியம்: கூடல் பதிப்பகம், ப்ளாக்ஃபென் வீதி, சிட்கப், கென்ட், 1வது பதிப்பு, மே 2023. (சென்னை 600 018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42 கே.பி.தாசன் தெரு, தேனாம்பேட்டை).

200 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 978-81-19034-13-0.

எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?. இளவாலை விஜயேந்திரன் (இயற்பெயர்: தியாகராஜா விஜயேந்திரன்). ஐக்கிய இராச்சியம்: கூடல் பதிப்பகம், ப்ளாக்ஃபென் வீதி, சிட்கப், கென்ட், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2023, 1வது பதிப்பு, மே 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிரீன் அச்சகம், 693, காங்கேசன்துறை வீதி).

200 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-82-693390-0-0.

தியாகராஜா-பரமேஸ்வரி ஆசிரியத் தம்பதிகளின் நான்காவது பிள்ளையாக 1961 ஆவணியில் இலங்கையின் மலையக நகரான நுவரெலியாவில் பிறந்தவர் விஜயேந்திரன். நானுஓயா எடின்பர்க் தோட்டப் பாடசாலையிலும், சிறுவிளான் கனகசபை வித்தியாலயத்திலும் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், இடைநிலை, உயர்தரக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கற்றவர். பள்ளிக்காலத்திலேயே இவரது ஆக்க இலக்கியப் புனைவுகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டன. இலங்கை விவசாயக் கல்லூரியில் உயர்கல்வி பெற்றபின் வடயெமன் நாட்டில் சில ஆண்டுகள் பணியாற்றி, பின்னர் இலங்கை திரும்பிய இவர் யாழ்ப்பாணம் ‘ஈழமுரசு’ பத்திரிகையில் 1986-1987இல் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார். 1987இல் புலம்பெயர்ந்த விஜயேந்திரன் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் வசித்து வருகிறார். இலக்கியம், தமிழ்க் கல்வி சார்ந்து தொடர்ச்சியாக இயங்கி வரும் இவர், தாயகம் சார்ந்த அபிவிருத்தி, இயற்கை பேணல் ஆகியவற்றில் அக்கறைகொண்டவர். இலங்கையில் ‘புதுசு’ (1980-1987) சஞ்சிகையினதும், நோர்வேயில் ‘சுவடுகள்’ சஞ்சிகையினதும் (1988-1998) ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். முன்னர் 1999இல் ‘நிறமற்றுப்போன கனவுகள்’ என்ற இவரது முதலாவது கவிதைத் தொகுதியை தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். இதிலுள்ள கவிதைகளெல்லாம் நாம் கடந்து வந்த வலிமிகுந்த காலத்தின் பதிவுகளே. அநீதிக்கு எதிரான, நீதிக்கான, மனித விடுதலைக்கான, மனித மேன்மைக்கான குரலாக இவரது கவிதைகள் ஒலிக்கின்றன. இயல்பான நேரடியான படிமங்களால் அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்.

ஏனைய பதிவுகள்

Casino Unter einsatz von 1 Eur Einzahlung

Content Erreichbar Kasino 5 Eur Einlösen: Schlusswort Zum Casino 1 Euroletten Einzahlen Sie sind Auszahlungen Im Spielsaal 1 Euro Mindesteinzahlung Wie geschmiert Denkbar? Mobile Casinos

14426 சுவாமி விபுலானந்தரின் தமிழியல் ஆய்வுகள்.

அம்மன்கிளி முருகதாஸ். மட்டக்களப்பு: சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை செயற்குழு, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.