17523 என் பாக்கள்.

ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

64 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0958-12-2.

மானிட அவலங்களை, அவஸ்தைகளை, இன்பியல்-துன்பியல் நிகழ்வுகளை, உணர்வுபூர்வமாகவும் சில வேளைகளில் அங்கதச் சுவையுடனும் வெளிப்படுத்தி நிற்கும் கவிதைகள் இவை. நூலாசிரியர் ஏ.எஸ்.சற்குணராஜா யாழ்ப்பாணத்திலுள்ள வியாபாரிமூலை என்னும் கிராமத்தில் பிறந்தவர். சித்திரப் பாட ஆசிரியராக தொழில் புரிய அரம்பித்து கல்வி நிர்வாக சேவையில் சித்தியடைந்து உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், வடமாகாண ஈசிடி பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்தவர். இதுவரை சித்திரப் பாடத்திற்கான ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். ஓவியத்துறையுடன் கவிதை, சிறுகதை, கட்டுரை என்பவற்றையும் எழுதிவருகிறார். சிங்களத்தில் உள்ள மூலக் கதைகளை தமிழிற்கு கொண்டுவருவதற்கான பல முயற்சிகளை தன் படைப்புகளூடாக வெளிப்படுத்தி வருகின்றார். இது ஏ.எஸ்.சற்குணராஜா அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுதி.  இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 283ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்