ஈழபாரதி. (இயற்பெயர்: எட்வேர்ட் நிக்சன்). சென்னை: பன்முகமேடை வெளியீடு, 67, தெற்குத்தெரு, வடக்கு புதுப்பட்டி, 1வது பதிப்பு, ஜுன் 2024. (சென்னை: ஸ்ரீதுர்கா பைன்டர்ஸ்).
v, 6-90 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ.
‘எங்கள் நிலத்தின் காற்றில் கந்தக அமிலம் கலந்தபின் மனிதப் புதைகுழியான பின் ஐந்திணையும் கடந்து குடியேறுகிறோம் ஆறாந் திணையில் அகதியாக’ என்று கூறும் இக்கவிதைத் தொகுதியின் மூலம் கவிஞர் ஈழபாரதி தனது அடையாளத்தை ஆறாம் திணைப் பின்புலத்தில் வைத்துப் பார்க்க முயன்றுள்ளார். ஆறாம் திணை வாழ்வியலை அதீத எளிமையாகப் பேசும் கவிதைகள் இவருடையவை. இலங்கையில் நெடுந்தீவைச் சேர்ந்தவர் ஈழபாரதி. தமிழகத்தில் புலம்பெயர்ந்து சிலகாலம் வாழ்ந்த பின்னர் தற்போது பிரான்சில் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். ஏற்கெனவே இவரது நூல்கள் சருகுகள் (2007,2019), பனைமரக் காடு (2014), நாட்குறிப்பற்றவனின் இரகசியக் குறிப்புகள் (2015), புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும் (2017), முகவரி இழந்த முகங்கள் ஆகிய தலைப்புகளில் வெளிவந்துள்ளன.