17529 ஒற்றைக் கோடை.

ஆதி பார்த்திபன் (இயற்பெயர்: ஆதித்தியன் பார்த்திபன்). சுவிட்சர்லாந்து: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, ஜுன் 2024. (சென்னை 600 089: ரமணி பிரின்ட் சொலூஷன்ஸ்).

136 பக்கம், விலை: ரூபா 900, இந்திய ரூபா 180.00, அளவு: 21×14  சமீ., ISBN: 978-624-93672-0-3.

கவிஞர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ஒற்றைக்கோடை தாயதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அவரது முன் பருவத்துக் கவிதைகள் இவை. ‘யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் அதன் சாம்பலிலும் தணலிலும் இருந்து எழுந்த முதல் தலைமுறைக் கவிஞர்களுள் இக்கவிஞரும் ஒருவர்.ஆதி பார்த்திபனின் வாழ்வியல் களம் போர் உக்கிரமாக நிகழ்ந்த வன்னிக்கு வெளியில் வேறொரு தளத்தில் இயங்கியது. மனிதர்களையும் சமூகத்தையும் அவர் அப்பாவித்தனமாக அணுகுவதில்லை. அவற்றின் போலித்தனங்களை, வாழ்வை என்னவாக ஆக்கிக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம் என்பதில் கூருணர்வுடன் எதிர்வினையாற்றியபடி இருப்பார். 2012 களின் பின் அவர் தீவிரம் கொண்டு இலக்கிய ஆக்கங்களில் ஈடுபட்டார். அவை புதிதான ஒரு சொல் முறையையும், இசையையும் ஈழத்தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியது. அவை வாழ்வின் உணர்ச்சிகரமான காதலின் முன் பருவ உறவின் நீளத்தைப் பலநூறு வரிகளாக்கியது. ஏராளமாக எழுதித் தள்ளினார். அவரது வாழ்வும் நிலையற்று அலைந்து கொண்டேயிருந்தது, அதன் சரிவான பள்ளங்களைக் கவிதைகளை ஊன்றி நடந்து வந்தார். மனிதர்கள் மீதான அன்பும் நம்பிக்கையும், அன்பற்ற நிலையும் நம்பிக்கையின்மையும் அவரது கவிதைகளிலும் புனைவுகளிலும் ஊடாடிக் கொண்டேயிருக்கும். அவர் பத்து வருடங்களுக்கு முன்னரே அவரது தனிக்குரலை அடையாளம் கண்டு கொண்டார். தொடர்ந்து எழுதி முன் செல்லக் கூடிய நுட்பங்கள் வாய்க்கபெற்றவர்.’(கிரிஷாந்த்).

ஏனைய பதிவுகள்

Banana leading site Ball Bonanza

Posts % Sensuous Honey 22 Position Totally free Ports On line Jewels Bonanza On the web Position Online game Cards The basic Backgammon Regulations For