17530 கசக்கும் கவிதைகள்.

சிவலோகதாசன் சதுர். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

82 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-57-3.

‘சி.சதுர் எண்பதுகளில் என்னிடம் கற்ற மாணவன் திரு. வ.சிவலோகதாசன் (பேராசிரியர்) அவர்களின் அன்பு மகன். கவிதைகள் கசக்குமா? கவிதைகளின் கருத்து ஆயுதத்தால் குத்தப்படுபவனுக்கு கசக்கும். சி.சதுர் வடித்துள்ள கவிதைகள், என்னுள் இனிக்கின்றன. இச்சின்னக் கவிஞனின் கவிதைப் பெண்கள் சதிராடி என்னைக் கிறங்கடிக்கின்றனர். கவிதைகளின் ஆழத்தில் அவற்றின் கனதியில் நீராடி மகிழ்கிறேன். முன்னுரையில் சி.சதுர் கூறுவது போல, அவர் நடையில் மகாகவி பாரதி நடக்கக் காண்கிறேன். கவியரசர் கண்ணதாசனின் கவித்துவ வெளிப்பாட்டைக் காண்கிறேன்’ (இராஜகுரு சேனாதிபதி இம்மானுவேல் புஸ்பராஜன் -அணிந்துரையில்).  இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 337ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்