சு.கருணாநிதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
44 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-0958-17-7.
பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் கவிஞர் சு.கருணாநிதியின் கவிதைத் தொகுதி. என்னையறியாத நான், கண்டு பிடியுங்கள், பார்த்திருக்க மனம் மறுக்கும், கூலிக்காரன்கள், நிலைமை இப்போது, மாநாடு, ஆணுக்கழகு, வேரைத் தேடும் விருட்சம், தேடல், இது வாழ்க்கை அல்ல, அபிவிருத்தி, முதலாளிகள், ஓ மானுட குழாமே, மண்ணை நாடுது மனது, தேசிய அகதி, உஷ்..!, திருட்டுப் பிள்ளைகள், செய்யாமைக்கு நன்றி, காத்திருப்பு, பணம், வலயம், சந்தை, மேலதிக பயங்கள், பிரமாண்டங்களின் பயமுறுத்தல், கடலுடன் கதைத்தல், பிரகடனப்படுத்தப்பட்ட புதிய கறுப்புநாள், அவள் கேள்விகளாலானவள், ஒருவரையறியா ஒருவராய், நிலவைக் காணாத நான், கடவுளும் நானும், கருக்குகள், கொலை இரசிகர்கள், அவர்களும் இவர்களும், குழல்களுக்குள், என்னை அறிகையில் நான் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 295ஆவது நூலாக வெளிவந்துள்ளது.