சி.சிவசேகரம். வவுனியா: பெண்விடுதலைச் சிந்தனை அமைப்பு, 85/7, ஸ்ரீநகர், பூந்தோட்டம், இணை வெளியீடு, உக்குவளை: பெண்விடுதலைச் சிந்தனை அமைப்பு, 48/5, தெமட்டகொல்ல, 1வது பதிப்பு, மார்ச் 2023. (கொழும்பு 11: வேர்ல்ட் விஷன் கிராபிக்ஸ்).
xii, 48 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.
112ஆவது சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஏற்கெனவே பல்வேறு தொகுப்புகளில் வெளிவந்த கவிஞர் சி.சிவசேகரத்தின் 26 பெண் விடுதலை கவிதைகளை பெண்விடுதலைச் சிந்தனை அமைப்பு, ஒருதொகுப்பாக வெளியிட்டுள்ளனர். இக்கவிதைத் தொகுப்பில் உள்வாங்கப்பட்டிருக்கும் கவிதைகள், இலங்கையில் இனப்பிரச்சினை போராக வடிவெடுத்ததன் பின்னணியில், பெண்கள் அன்றாடம் தமது சமூக பொருளாதார பண்பாட்டு வாழ்வில் எதிர்கொண்ட வன்முறைகள், அவர்கள் அனுபவித்த துயரங்கள், அடக்குமுறைகள், சுரண்டல்களைப் பற்றியனவாயும் அவை தொடர்பான விமர்சனங்களாயும் அமைந்திருக்கின்றன. அவ்வகையில் பெண்கள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறையை கேள்விக்குட்படுத்தும் சிவசேகரத்தின் கவிதைகளை உழைக்கும் பெண்களிடமும் சமூக மாற்றத்தில் பங்களிக்க வேண்டிய ஆண்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. சிறை: இரகசியம், எல்லாந் தெரிந்தவன், அவன் என்னை நேசிக்கிறான், அகலிகை, செப்பனிட்ட படிமங்கள், புதிய படிமம், தாய்மை எய்தல் பற்றிய ஒரு சிந்தனை, குன்றத்துக் கும்மி, விபசாரம், போரால் அழுகிற தாய்க்கு, நுகர்வுப் பொருளாதாரச் சிந்தனை, கற்புப் பற்றிய ஒரு பாடம், சீருடையில் ஒரு பெண், அரசும் நீதியும், பத்தாவது, கைப்பைகள் பற்றி ஒரு சிந்தனை, ஒரு காதற் பொழுது, காணாமற்போன வண்ணத்துப் பூச்சிகள், நாடற்றார் பாடல்கள், தொழிற்பெயர், தாயுள்ளம், அவளுடைய உண்மை, தாயும் சேயும், தேவி எழுந்தாள், விடுதலையின் விலை, வீர மகளிர் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.