திக்குவல்லை கமால். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மே 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
60 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-99-4.
எலிக்கூடு (1973), பூக்களின் சோகம் (2009), புல்லாங்குழல் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளிவந்துள்ள திக்குவல்லை கமாலின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. 1971ஆம் ஆண்டு முதல் இன்று வரை பத்திரிகை, சஞ்சிகை, முகநூல் ஆகியவற்றில் வெளியான கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. புதிய வைத்தியம், விருந்து, தேசிய கீதம் பாடும் துப்பாக்கிகள், குயில் பாட்டு, பருவப் பூக்கள் மணக்க-, வயிறும் கயிறும், மாட்டு வண்டி, காத்திருப்பு, எதிர்வீட்டு நாய்கள், பயணம் தொடரும் படகுகள், சுமைகள், காற்றின் சீற்றம், அன்பு?, விருது, நாளை, சுவை, நானாக, எப்படி?, நேரம், காணவில்லை, நீள்கடலூர் நிலா, இருப்பவை, இது தான் உண்மை, கதவு, விலைவாசி, இல்லாப் பூ, முகம், வித்து, வசந்தம், தேசப்படம், முரண்பாடு, ஊஞ்சல், சான்றிதழ், நிராசை, ஒவ்வொரு திசையிலும், பயணம், தங்க நிலவு, காகிதக்காடு, அசாத்தியம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 279ஆவது நூலாக வெளிவந்துள்ளது.