அம்பலவன் புவனேந்திரன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
xii, 108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-5849-36-9.
நீண்டகாலமாக மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்து, ஜேர்மனியின் ஒபஹவுசன் நகரத்தில் வாழும் அம்பலவன் புவனேந்திரன் எழுதிய கவிதைகள் இவை. இக்கவிஞர் தனது கவிதைகளில் எமது மண்ணின் போர்க்கால சூழ்நிலைகளைப் பதிவுசெய்யும் அதே வேளை புலம்பெயர் தேசத்தவரின்; அவலங்களையும் பதிவுசெய்யத் தவறவில்லை. அம்பவலன் புவனேந்திரனின் கவிதைகள் வெறுமனே உணர்ச்சிபூர்வமான கவிதைகள் அல்ல. அவை உணர்வுபூர்வமானவை. வாழ்வின் யதார்த்தம் பேசுபவை. தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகமாக இவர் கவிதையையே தேர்ந்தெடுத்துள்ளார். இது மகுடம் வெளியீட்டகத்தின் 71ஆவது நூலாக வெளிவந்துள்ளது.