வல்வைக் கமல் (இயற்பெயர்: சக்திவேல் கமலகாந்தன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, சித்திரை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xii, 52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-96-1.
இக்கவிதைத் தொகுப்பு வன்னி அவலங்களின் தொடர்ச்சியாகவும், யுத்த வடுக்களின் தொடர்ச்சியாகவும் அமைகின்றது. அகதி வாழ்வு, நிலையான இருப்பிடம் இன்மை, சொந்த இடங்களில் குடியமர முடியாமை, காணாமல் போனவர், அரசியல் கைதிகள், அன்றாட வாழ்வியல் திண்டாட்டம் என அது நீண்டு கொண்டே போகின்றது. இக்கவிதைத் தொகுப்பில் ஈழநிலம், விடியாத இரவுகள், தேச இழப்பு, எதுவுமற்ற தேசமாய், பிணங்களின் தேசம், அரசியல் கைதி, உனக்கானது, காணாமல் போனவர், புதைகுழி வேட்டை, மானுடம் பாடுவோம், மரணங்கள் மலிந்த பூமி, எழுவோம், ஏமாற்றிட, வந்து விட்டார்கள். இன்னும் இல்லை, கோப்பாப் பிலவு, புதுத் தேர்தல், குருதி நிலம் 01 (வன்னி), குருதி நிலம் 02 (கொட்டதெனியா), குருதி நிலம் 03 (வவுனியா), குருதி நிலம் 04 (புங்குடுதீவு), குருதி நிலம் 05 (முள்ளிவாய்க்கால்), தொடரும் முயற்சிகள், தொடர்கதைகள், ஓர் இனத்தின் கதை, ரேகையில்லா மனிதர்கள், வெற்றுக் காகிதங்கள் ஆகிய தலைப்புகளில் வல்வைக்கமல் எழுதிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘வானத்தின் அமைதி குலைகிறது’ என்ற கவிதைத் தொகுதியை (2015) தொடர்ந்து வெளிவரும் இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி இதுவாகும். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 120ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118993).