இல்மி அஹமட் லெப்பை. காத்தான்குடி 4: இஸ்லாமிய இலக்கியக் கழகம், இல. 20/09, முஸ்தபா ஹாஜியார் வீதி, 1வது பதிப்பு, 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).
x, 77 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-96039-1-2.
கவிஞர் இல்மி அஹமட் லெப்பை அவர்களின் 32 கவிதைகளைக் கொண்ட நூல். ‘என் மனம் பேசும் மௌனங்கள்’ தொடங்கி ‘அறிவொளியேற்றிய அன்னை’ ஈறாக பல்வேறு வகைத் தலைப்புகளில் இக்கவிதைகள் விரிந்துள்ளன. காத்தான்குடி பட்டின ஆட்சி மன்றத்தில் 17 ஆண்டுகளுக்கு மேலாக தவிசாளராக பணியாற்றிய மர்ஹூம் எம்.ஐ.எம்.காசிம் ஹாஜியாரின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞரின் தந்தையான எம்.எல். அஹமது லெப்பை முதுபெரும் இலக்கியவாதியாவார். ஏராளமான கவியரங்குகளை தலைமைவகித்து நடாத்தி வந்த இவருக்கு ‘கவிமேகம்’ என்ற பட்டப்பெயரையும் இவரது சமூக அமைப்பினர் வழங்கியிருந்தனர். இவரது முதலாவது கவிதை நூல் ‘உடையாத ஏணி’ என்பதாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72522).