17544 கூவிப் பிதற்றலன்றி: கவியரங்கக் கவிதைகள்.

சோ.தேவராஜா. மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.அச்சகம், சில்லாலை வீதி).

vi, 50 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-93177-1-0.

இத்தொகுப்பில் பண்பாடு உயர்ந்திடப் பாடு, கனவு மெய்ப்பட வேண்டும், தருமம் மறுபடி வெல்லும், மனிதம் மண்ணில் உயரும் வரை, ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன், எமக்கும் சிவக்கின்ற வானம் வரும், கூடிப் பிதற்றலன்றி, ஒரு சில விதி செய்வோம் ஆகிய தலைப்புகளில் கவிஞர் சோ.தேவராஜா இயற்றிய கவியரங்கக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவர் 1970களிலிருந்து கவிதை எழுதிவருபவர். கொழும்பு பல்கலைக்கழகம், மருதானை தொழில்நுட்பக் கல்லூரி, தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாணத்தில் அராலி சரஸ்வதி வித்தியாலயம் முதல் பல பாடசாலைகள், சனசமூக நிலையங்கள் எனப் பல்வேறு அரங்குகளிலும் கடந்த ஐந்து தசாப்தத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கவியரங்கங்களில் கலந்து சிறப்பித்தவர்.

ஏனைய பதிவுகள்