17545 கேயொஸ் தியறி.

வேல். லவன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜுலை 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

120 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0958-96-2.

கிளிநொச்சியைச் சேர்ந்த வேல்.லவன் படைத்த 62 கவிதைகளை உள்ளடக்கிய முதலாவது தொகுப்பு இது. இவரது கவிதைகள் கூர்மையும் செறிவும்அழகியலும் மிக்க கவிதை மொழியினால் ஆனவை. ஈழ நிலத்தின் வாழ்வை, போரின் விளைவுகளை, காதலை, இயற்கையின் பிரமிப்புகளை பேசும் இக்கவிதைகள் பூமிப்பந்தெங்குமான வாழ்வின் பொருள்களையும் பேசுகின்றன. வாழ்வின் தீரா வேட்கையை தலைமுறை தாண்டி கொண்டுசேர்க்கும் கவிதைகள் இவை. கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த வேல்.லவன் இலங்கை நூலகச் சங்கத்தில் நூலகமும் தகவல் விஞ்ஞானமும் உயர் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். கிளிநொச்சியில் நூலகராகவும் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார். 1999இல் ‘மனிதா’ என்ற கவிதையுடன் தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய இவர் தமிழகத்திலும், இலங்கையிலும் உள்ள பல்வேறு ஊடகங்களிலும் தன் கவிதைகளை எழுதிவந்துள்ளார். கவிதைகளுக்காக இதுவரை நான்கு தடவைகள் இலங்கை கலாச்சார அமைச்சின் தேசிய மட்ட பரிசுகளைப் பெற்றுள்ள இவர், தன் சிறுகதைகளுக்காகவும் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல் அமைச்சினால் வெள்ளிப்பதக்கம் மற்றும் வெள்ளிக் கேடயத்தையும் பரிசாகப் பெற்றுள்ளார். இந்நூலின் தலைப்புக் கவிதையான ‘கேயொஸ் தியறி’ க்காக தமிழ் மிரர் பத்திரிகையின் முதல் பரிசினையும் பெற்றுள்ளார்.

ஏனைய பதிவுகள்