சிவலோகதாசன் சதுர். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
74 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-58-0.
கொழும்பு ரோயல் கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரக் கல்வியைக் கற்கும் சிவலோகதாசன் சதுரின் முதலாவது முயற்சியாக இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. கொரோனா தொற்றால் இவ்வுலகம் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் இவ்விளம் கவிஞனால் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால், அதனுடைய தாக்கமும் காலம் காலமாக நம் சமூகத்தில் நிலவிவரும் பொதுப் பிரச்சினைகள் பற்றிய ஒரு தெளிவும், ரசனையின் பொருட்டு சில காதல் கவிதைகளும் இதனுள் அடங்கியுள்ளன. உடப்பூரை பிறப்பிடமாகக் கொண்டவர் சிவலோகதாசன் சதுர். இவர் கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 336ஆவது நூலாக வெளிவந்துள்ளது.