17547 சாம்பாறு.

க.பிரேம்சங்கர். லண்டன்: கவிஞர் கவிக்கூத்தன் க.பிரேம்சங்கர், 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், இல. 34, பிறவுன் வீதி).

x, 72 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-6029-02-9.

பிரேம், கவிக்கூத்தன் ஆகிய புனைபெயர்களில் படைப்பாளியாக அறிமுகமாகியுள்ள திரு. கனகசுந்தரம் பிரேம்சங்கர், 1967 ஆகஸ்ட் 17அம் திகதி திருக்கோணமலையில் பிறந்து, பின்னர் தனது இளவயதில் சுன்னாகத்தில் வாழ்ந்துவந்தவர். சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை, யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான பிரேம்சங்கர், புலம்பெயர்ந்து லண்டனுக்குச் சென்று அங்கே தற்போது வாழ்ந்துவருகிறார். தனது படைப்புகளான ‘கழுதை சுமந்த கவிதைகள்’, ‘மெய்யெனப் பெய்யும் பொய்’, ‘சபரிக்காட்டின் சந்தன வரிகள்’ ஆகிய மூன்று நூல்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். இவரது அண்மைக்கால கவிதைகளின் தொகுப்பாக வெளிவரும் ‘சாம்பாறு’, தாயகத்திலிலிருந்து நெடுந்தூரத்தில் புலம்பெயர்ந்து வசிக்கும் ஒரு ஈழத் தமிழனின் தேசம் பற்றிய கனவுகள், தன் தாய்நாடு பற்றிய குமுறல்கள், தாய்நாட்டில் வாழ்ந்த இளமைக்கால நினைவுகள், ஆசைகள், நிராசைகள், இழப்புகள், இன்னல்கள், மகிழ்வுகள் என்பனவற்றை கற்பனை கலந்து மீட்கும் சுவையானதொரு சாம்பாறாக இரசனை மிக்கதாக விளங்குகின்றது.

ஏனைய பதிவுகள்

15986 சீர்பாதகுல வரலாறு.

அருள் செல்வநாயகம். களுவாஞ்சிக்குடி: சீர்பாதகுல சமூக கலாச்சார ஒன்றிய வெளியீடு, திருவருள் நிலையம், 1வது பதிப்பு, 1982. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). xvii, 128 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 20×14 சமீ.