17548 சிதறல்கள் 100 (கவிதைத் தொகுதி).

து.திலக் (கிரி) (இயற்பெயர்: துரைராசா கிரிகேஸ்வரன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xx, 172  பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-25-2.

சிதறல்கள் 100 (கவிதைத் தொகுதி). து.திலக் (கிரி) (இயற்பெயர்: துரைராசா கிரிகேஸ்வரன்). சுவிட்சர்லாந்து: தமிழர் களறி (ஆவணக் காப்பகம்), ஐரோப்பாத் திடல், 1B, 3008- பேர்ண், 2வது பதிப்பு, 2024, 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xxiv, 176  பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-25-2.

சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தில் புலம்பெயர்ந்து வாழும் துரைராசா கிரிகேஸ்வரன், உரும்பிராய் கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்டவர். தனது தமையனாரான அமரர் து.திலகேஸ்வரனின் நினைவாக தனது புனைபெயரை ‘து.திலக்’ என்று வைத்துக்கொண்டவர். எம்மினத்தின் பெருவலிகளை தன் உணர்வுகளின் வெளிப்பாடாக இவரது பேனா பதிவாக்கியிருக்கிறது. இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி. இதில் நூறு கவிதைகளை பதிவுசெய்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்