யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், தபாற்பெட்டிச் சந்தி, பலாலி வீதி, திருநெல்வேலி).
xxviii, 104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98404-0-9.
இந்து தத்துவ மாணவரான கலாநிதி ச.முகுந்தனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் சிறப்பியல்புகளுள் முக்கியமானதாக விளங்குவது இந்துப் பண்பாடு சார்ந்த உணர்வாகும். இந்து சமயம், இந்து தத்துவம், சடங்குகள், இந்து வாழ்வியற் கோலங்கள், இந்துசமய ஞானிகள், இந்துசமய சீர்திருத்தச் சிந்தனைகள் சார்ந்த விடயங்கள் வெவ்வேறு நோக்கிலும், போக்கிலும் இக்கவிதைத் தொகுதியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற பாங்கு சிறப்புக்குரியது. ‘தேர்ந்தெடுத்த சொல்லாட்சி, நல்ல புலமைத்திறன், தன் துறைசார் சித்தாந்த வீச்சு என்பன கவிஞர் முகுந்தனின் கவிதைகளை அணிசெய்கின்றன’ என்று யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர், தகைசால் பேராசிரியர் அ.சண்முகதாஸ் இந்நூலின் வெளியீட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ‘உலகமே புதுக்கவிதையின் பின் செல்லும் இந்நாளில், யாப்பிலக்கண வரம்புக்குள் நின்றுகொண்டு சமகால நிகழ்ச்சிகளைப் பாடும் ஆற்றலும் துணிச்சலும் வாய்ந்தவர் இக்கவிஞர்’ என்று கவிஞர் சோ.பத்மநாதனும்; முன்னர் இக்கவிஞரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ‘சித்தன் சிவயோகன்’ என்னும் கவிதை தொடக்கம், ‘வேதாந்தச் சிங்கம்’ என்ற கவிதை ஈறாக 46 கவிதைகளை கலாநிதி ச.முகுந்தன் இத்தொகுப்பில் தேர்வுசெய்து இடம்பெறச் செய்துள்ளார்.