எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
x, 78 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0958-78-8.
தனது பாடசாலை வாழ்க்கைக்காலத்திலேயே எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டவர் புலோலி தெற்கை பிறப்பிமாகக் கொண்ட பஞ்சகல்யாணி. இந்நூலில் இவர் ஓடிவருவாயடா, இனி என் முறை, காத்திருப்பு, நீயும் நானும், அவளும் நானும், என் அம்மா, தத்து, புயல், அதிஸ்டம், ஓட்டிசம், ஏன் வளர்ந்தோம், குடிசைச் சிறுவன், அவன், சிறுசெடி, தாயே, மரம், மண்டைஓடு, நாரை விடு தூது, சூரியப் பெண், பெண்கள் தினம், என்னவள், விதவை, அவள், நீ, பேரமைதி, அழகி, தென்றல் வரட்டும், எழுத்தாளன், சிறியார் நட்பு, சிங்கமும் சிட்டும், இருட்டு, தலைவிதி, ஒன்றாய் ஆனோம், மழை வெள்ளம், ஒயாத பயணம், வயிற்றுக் குத்து, நாட்டு நடப்பு, மூதாட்டி, ஆகிய தலைப்புகளில் எழுதிய 38 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 353ஆவது நூலாக வெளிவந்துள்ளது.