நாச்சியாதீவு பர்வீன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
x, 60 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-54-3.
சிரட்டையும் மண்ணும், மனவெளியின் பிரதி, மூன்றாவது இதயம் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளிவரும் திரு. நாச்சியாதீவு பர்வினின் நான்காவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். அனுராதபுர மாவட்டத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக விளங்குபவர் இவர். இவரது கவிதைச் செயற்பாட்டுக்காக அகில இலங்கை சிங்கள கவிஞர் சங்கம் ‘காவ்யஸ்ரீ’ பட்டமளித்து கௌரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் அறையில் சிக்கிய தும்பி, தெருப்பாடகன், நீலப் பறவையும் நிர்வாண மரமும், விளிம்புநிலை, அவர்கள் அப்படித்தான், கடந்து போதல், அரும்புகள், அடர்வனத்துப் பறவை, மனிதம் தொலைத்தவன், பிந்திய செய்திகள், இளமை என்பது, நீரிற் குமிழி போல, ஆதலால் காதல் செய்வீர், நான் நீ அவன் நிஜம், நானும் ஒரு பறவையாகிறேன், எதுவரை ஓடும், வெளிச்சம், அந்த வண்ணத்தி, அறுத்துப் பலியிடுவோம், சுதந்திர தாகம், புனையப்பட்ட சோகம், அந்த கடைசிப் பார்வை, எனக்கும் இருந்தது அழகிய நிலம், எங்கள் வீட்டுக்கும் வெள்ளம் வந்தது, எங்களை மன்னித்து விடுங்கள், உம்மாவின் ஞாபகத்தில், பாவத்தின் பலன் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 27 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.