திருமலை சுந்தா (இயற்பெயர்: சின்னத்துரை சுந்தரலிங்கம்). திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், A.R.Trading, 31/1, சமாது ஒழுங்கை, 1வது பதிப்பு, சித்திரை 2014. (திருக்கோணமலை: அஸ்ரா பிரிண்டர்ஸ்).
40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-41129-0-2.
தேசாபிமானி, குமரன், வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, அபியுக்தன், அக்னி, சுதந்திரன், சுடர் என பல்வேறு தேசிய, பிராந்திய ஊடகங்களில் தன் எழுத்துக்களைத் தவழவிட்டவர் திருமலை சுந்தா. ஆரம்பத்தில் கவிதைத்துறையில் ஈடுபட்டிருந்த இவர் பின்னாளில் சிறுகதை சொல்லியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இவரது ஆரம்பகால ‘தீவிர கவிதைக்கால’ வாழ்வில் அவ்வப்போது இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். உறுதிகொண்ட மனத்தினாய், சிறைப்பார்வை, புதிய அவதாரங்கள், ஒரு பூகம்பத்தின்.., சுவடுகள், உணர்வு, மரணத்தை வென்றவர்கள், இலட்சியம், கல்லறை, கருவறை, ஆமை, அறுவடை, புனிதத்தின் வாரிசுகள், கருகிய சடலம், நியாய முத்திரை, தமிழர் மானம், மண் துகழ், பரணிப் பல்லவிகள், விடுதலை, தொலைந்த நாட்கள், ஒரு முற்றுப்புள்ளி, இன்னுமா புரியவில்லை?, இயங்கியல் நியதி, உபதேசம், அவர்களின் வரவு, புது வசந்தம், விதைப்பு, புற்கள், புறப்பட்ட புயலே, போர் புதையல், நெல்சன் மண்டேலா, புதிய தீர்ப்பு, தாய்மனம் ஆகிய தலைப்புகளில் 1986-1987 காலகட்டத்தில் பிரசுரமான கவிதைகள் இவை. இந்நூல் அம்மா பதிப்பகத்தின் 18ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 107494).