17559 நிற்க அதற்குத் தக: கவியரங்கக் கவிதைகள்.

சோ.தேவராஜா. மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.அச்சகம், சில்லாலை வீதி).

vi, 45 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-93177-2-7.

கவிஞர் சோ.தேவராஜா அவர்கள் கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம் எனப்பல இடங்களிலும் நிகழ்ந்த இலக்கியக் கவியரங்குகளில் இயற்றிப் பாடிய நீதிக்கு நெஞ்சோ நிகர், அரசியல் மனிதர் எழுந்து நடப்பார், இருஞ்சற்றுப் பொறும் எல்லாஞ் சரிவரும், நிற்க அதற்குத் தக, எதை எடுத்துச் சொல்ல, போகாத ஊரும் பொய்யான வழியும், காணி நிலம் வேண்டும், யாழ்ப்பாண மாப்பிளையே, நீலம் பாரிச்சபடி இலங்கைத் தீவு, துயரப் பாக்களும் உயரப் பாவும் ஆகிய பத்துத் தலைப்புகளில் வடிக்கப்பட்ட கவியரங்கக் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘ஆச்சி’, ‘கூவிப் பிதற்றலன்றி’ ஆகிய கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளிவரும் ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும்.

ஏனைய பதிவுகள்