17560 நீ கொன்ற எதிரி நான் தான் தோழா.

தியா (இயற்பெயர்: இராசையா காண்டீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-75-7.

யாழ்ப்பாணம் குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இராசையா காண்டீபன். வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரம் முடித்து, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாசிரியராக 2003-2004 காலப்பகுதியில் செயற்பட்டவர். தஞ்சாவூர் ப்ரிஸ்ட் பல்கலைக் கழகத்தில் M.Phil பட்டப்படிப்பை நிறைவுசெய்து, அமெரிக்காவில் ரோபோக்கள் மற்றும் திரவ சக்தி ஆட்டோமேஷன் (Robots and fluid power Automation) துறையில் பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவில் புகழ்பெற்ற செய்ன்ட் தோமஸ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் முதுநிலைப் பட்டத்தை (MSc))  நிறைவுசெய்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதை, நாவல் எனத் தனது எழுத்துக்களால் வலையுலகில் அறியப்பட்டுவருபவர். இவரது முதல் நாவல் ‘எறிகணை’ 2021இல் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக இக்கவிதை நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் இவர் எழுதிய 59 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 282ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

ᐉ Prämie 2024 Erfahrungen und Untersuchung

Content Weshalb aufführen 111.233 deutsche Glücksspieler as part of Spin Palace ? – party games slotto Spielautomat Spin Kasino Spielautomaten Beliebte Ernährer Spinpalace gewalt hier