க.சட்டநாதன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 88 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-13-3.
இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் அகவுலக சஞ்சாரங்களின் சொல் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. அவை தன்னுணர்வுக்கு முதன்மையளிக்கின்றன. காதல், காமம், பிரிவு, விரகம், ஏக்கம், கழிவிரக்கம், தவிப்பு, செய்வதறியாது ஊசலாடும் மனம் எனப் பல்வேறு உணர்வுகளின் கூட்டுத் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. 1970களின் ஆரம்பத்தில் இலக்கிய உலகில் நுழைந்தவர் கனகரத்தினம் சட்டநாதன். இவர் வேலணைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பயின்று தனது பி.எஸ்.சி. பட்டத்தினைப் பெற்றவர். ஆசிரியர் பணியை மேற்கொண்டு தற்போது ஓய்வுபெற்றுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 390ஆவது நூலாக வெளிவந்துள்ளது.